tamilnadu

img

விவசாயிகளுடன் நாடே அணிதிரளட்டும் : கேரள முதல்வர் அழைப்பு

திருவனந்தபுரம்:
நாடு முழுவதும் விவசாயிகளுடன் கைகோர்க்க வேண்டும் எனவும், விவசாயிகளின் வாழ்க்கையை அழிக்கும் வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்தது ஜனநாயகம் மீதான தாக்குதல் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.  முகநூலில் கேரள முதல்வர் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: 

கடந்த 6 ஆண்டுகளில் 60,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலைகளை செய்துள்ள நாடு இந்தியா. 2019 ஆம் ஆண்டில் மட்டும் 10281 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். விவசாயிகளின் வாழ்க்கையை என்றென்றும் துன்பகரமானதாக மாற்றும் சட்டங்களை மத்திய அரசு இயற்றி வருகிறது.  இடைத்தரகர்களைத் தவிர்ப்பது என்ற போர்வையில், விவசாயிகளை கார்ப்பரேட் விவசாயத்திற்கு அடிமைகளாக்குவது நாட்டின் ஈடுசெய்ய முடியாத அழிவுக்கு வழிவகுக்கும். இந்த அநீதிக்கு எதிராக அதிகரித்து வரும் ஆர்ப்பாட்டங்களை நாடாளுமன்றத்தில்கூட அடக்கி ஒடுக்க முயற்சிப்பது ஜனநாயகத்தின் அனைத்து மதிப்புகளையும் மறுக்கும் நடவடிக்கையாகும். விவசாயிகளின் வாழ்வாதாரம் நாட்டின் உயிர்நாடி. இவ்வாறு முதல்வர் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

;