tamilnadu

img

கேரள எம்.எல்.ஏ, சி.எப் தாமஸ் காலமானார்

திருவனந்தபுரம்:
கேரளத்தில் உள்ள சங்கநாசேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், கேரள காங்கிரஸ் மூத்த எம் தலைவருமான சி.எப். தாமஸ் (81) காலமானார். திருவல்லாவில் உள்ளஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கேரள காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான இவர் கேரள காங்கிரசின் ஜோசப் பிரிவின் துணைத் தலைவராக செயல்பட்டு வந்தார்.1980 முதல் ஒன்பது முறைசங்கநாசேரியிலிருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏ.கே. ஆண்டனி மற்றும் உம்மன் சாண்டி ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள இவர் கேரள காங்கிரஸ் உருவானதிலிருந்து கே.எம்.மாணியுடன் உறுதியாக நின்றார். மாணி இறந்த பிறகு, பி.ஜே.ஜோசப் பிரிவில் சேர்ந்தார்.