tamilnadu

உள்ளாட்சி வார்டுகளை அதிகரிக்க கேரள அரசு முடிவு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுப்பு?

திருவனந்தபுரம், ஜன.16- உள்ளாட்சி அமைப்பின் வார்டுகள் எண் ணிக்கையை அதிகரித்து கேரள அரசு பிறப்பித்த அவசர சட்டத்திற்கு அம்மாநில ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளார். கேரள மாநில உள்ளாட்சி தேர்தல்கள் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள் ளது. 2015 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டி யலை அடிப்படையாக கொண்டு தேர்தல் நடத்தப்படும் என ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையம் அறிவி்த்துள்ளது. இந்நிலை யில் வார்டுகளை அதிகரிக்க மாநில அமைச்ச ரவை கூட்டத்தில் முடிவு செய்து அதற்கான அவசர சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என எதிர்கட்சி தலை வர் ரமேஷ் சென்னித்தலா ஆளுநர் ஆரிப் முகமது கானை சந்தித்து மனு கொடுத் துள்ளார்.     இந்நிலையில் வியாழனன்று செய்தி யாளர்களை சந்தித்த ஆளுநர், நான் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் ஆக மட்டுமே இருப்பதற்கு ஜனநாயகம் ஒப்புக்கொள் ளாது. இதுதொடர்பான கேள்விகளை எழுப்பி, அதற்கான விளக்கங்களை மாநில அரசி டம் கோரியுள்ளேன். அதன் பிறகு இந்த விவ காரத்தில் யோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.  இதனிடையே ஆளுநருக்கும் கேரள அரசுக்குமிடையே மோதல் என ஊட கங்கள் பேசத் துவங்கின. இதுகுறித்து சட்டத் துறை அமைச்சர் ஏ.கே.பாலன் கூறுகை யில் கேரள அரசுக்கும் ஆளுநருக்கும் இடை யில் எந்த பிரச்சனையும் இல்லை. அப்படி வராது. வந்தாலும் அதை எதிர்கொள்ளும் திறன் கொண்ட முதல்வரும் அரசும் உள் ளது என்றார்.

;