tamilnadu

img

மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்தவர்

திருவனந்தபுரம்:
கேரள ஆளுநர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பி.சதாசிவத்துக்கு அன்பான வழியனுப்பு விழா திருவனந்தபுரம் மஸ்கட் ஓட்டலில் நடந்தது.விழாவை துவக்கி வைத்து பினராயி விஜயன் பேசுகையில், மதச்சார்பின்மை கோட்பாடுகளை உயர்த்திப்பிடித்தவர் ஆளுநர் பொறுப்பிலிருந்து விடுவிக் கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். சமூகநீதி, பாலின சமத்துவம் ஆகியவற்றில்ஆளுநரின் நிலைபாடு முன்மாதிரிகளாகும். இயற்கை பேரிடர்கள், தொற்றுநோய்கள் போன்றவை கேரளத்தை பாதித்தபோது அரசுக்கு ஆதரவாக நின்றார். கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது ஒருமாத சம்பளத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கி முன்மாதிரியாக திகழ்ந்தார். மாநில அரசுடன் நல்லுறவு பாராட்டினார். ஒருமுறைகூட மாநில அரசுடன் முரண்படும் நிலை ஏற்படவில்லை. அரசியல்சட்டத்தின் அடிப்படையை உயர்வாகபோற்றினார். அவர் ஆளுநர் பொறுப் பில் நீடிப்பார் என்று எதிர்பார்த்தோம். பரஸ்பர நல்லெண்ணத்துடன்கூடிய சகோதர உறவை அவரிடம் காணமுடிந்தது. கேரளத்துக்கு அவர் அளித்துவந்த அனைத்து உதவிகளுக்கும் நன்றிதெரிவிப்பதாக முதல்வர் கூறினார். 

அரசை மாற்றுவது தீர்வல்ல: ஆளுநர்
ஆளுநர் பேசுகையில் ஒக்கியும்பெருவெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டபோது கேரளம் வெளிப்படுத்திய ஒற்றுமையை மாநிலத்தின் புனரமைப்பிலும் காட்ட வேண்டும் புதிய கேரளம் சாத்தியமாகும்போது கேரள மாடல் உலகத்துக்கே முன்னுதாரணமாகும். ஆளுநரும் மாநிலமும் தம்மிடையே உள்ளஆரோக்கியமான உறவு அனைத்து மாநிலங்களிலும் பின்பற்ற வேண்டியதாகும். பிரச்சனைகள் ஏற்படும்போது அரசை மாற்றுவதற்கு பதிலாக தீர்வுகாணும் முயற்சியை ஆளுநர் மேற்கொள்ள வேண்டும். தனது உத்தரவுகளை மாநில அரசு எப்போதும் ஆக்கப் பூர்வமாக எடுத்துக்கொண்டது. முதல்வர் பினராயி விஜயனும் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டியும் மூத்ததலைவர்களும் அன்பும் ஒத்துழைப்பும்வழங்கினர். கேரளமும் மலையாளிகளும் என்றென்றும் மனதில் நிற்பார்கள்என்று ஆளுநர் பி.சதாசிவம் கூறினார். ஆளுநருக்கு முதல்வர் பினராயி விஜயன் ஓணப்புடவையும் அன்பளிப் பும் வழங்கினார். ஆளுநரின் மனைவிசரஸ்வதிக்கு முதல்வரின் மனைவிகமலா ஓணப்புடவை வழங்கினார். விழாவில் சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன், எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா ஆகியோர் பேசினர். அமைச்சர்கள்ஏ.கே.பாலன், ஏ.சி.மொய்தீன், ஜி.சுதாகரன், டி.எம்.தாமஸ் ஐசக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தலைமைச் செயலாளர் டோம் ஜோஸ் நன்றி கூறினார்.

;