உலக ஓவிய நாளில் (ஏப்ரல் 15) எனது ஓவியம் யாருக்காக..எதை நோக்கி என்று யோசித்த போது...கேரளத்தின் முதலமைச்சர்தான் முன் வந்தார்... அவரை வரைவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்...ஆனால் அதில் மிக முக்கியமான காரணம்... கொரோனா காலத்தில் அவர்காட்டிவரும் மனிதாபிமானம்..! குறிப்பாக-கேரளத்தில் இஸ்லாமியர்கள் அதிகம்.
.அனைவரும் Middle East எனப்படும் அரேபிய நாடுகளில் பல்வேறு வகையில் தொடர்புடையவர்கள்...கொரோனா காலத்தில் பலரும் கேரளா வந்திருக்கலாம்..! டெல்லி மாநாட்டிற்கு போய் வந்தவர்கள் அங்கும் இருந்திருக்கலாம்....! ஆனால் இன்றுவரை ஒரு முதலமைச்சராக அவருடைய பேட்டியிலோ...அல்லது அவரது அமைச்சரோ..அதிகாரிகளோ...
கொரோனாவை வைத்து மத அரசியல் செய்யாமல் -அனைத்து உயிர்களையும் பொதுவாக மதித்து,மனிதாபிமானத்துடன் செயல்படும்விதத்திற்காகவே இந்த ஓவியம் …! வேறு பல மாநிலத்திலும்..பாண்டிச்சேரி..ஒரிசா..வங்கம்..ஆந்திரா... தெலுங்கானா... மாநிலங்களில் கூட இந்த அணுகுமுறை இருந்திருக்கலாம்..அவர்களுக்கு என் அன்புகளும்..மரியாதைகளும்.