tamilnadu

img

உற்சாகம் பொங்கிய பெண்களின் ‘இரவு நடை’

திருவனந்தபுரம், மார்ச் 8 - ‘பொது இடம் எனக்கும்’ என்கிற முழக்கத்துடன் சர்வதேச மகளிர் தினத்தின் ஒரு பகுதியாக ‘பெண்களின் இரவு நடை’ நிகழ்ச்சி நடைபெற்றது.   பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும ‘இரவு நடை’ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருவனந்தபுரத்தில் நிசாகந்தியிலிருந்து காந்தி பூங்கா வரை நடந்த இரவு நடையில் அமைச்சர் கே.கே.சைலஜா பங்கேற்றார். செண்டை மேளம் முழங்க இரவு நடையின் துவக்க நிகழ்ச்சி அமைந்தது. பொது இடம் பெண்களுக்குமானது என்பதை சமூகம் அங்கீகரிக்க வேண்டும். அதற்காகவே இரவு நடை ஏற்பாடு செய்யப்பட்டதாக அமைச்சர் கூறினார்.  பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குநர் டி.வி.அனுபமா, திட்டமிடல் வாரிய உறுப்பினர் மிருதுன் ஈப்பன், பாலின ஆலோசகர் டி.கே.ஆனந்தி, பெண்கள் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் பி.சி.பிந்து, என்எஸ்எஸ் தொண்டர்கள். பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் இரவு நடையில் கலந்துகொண்டனர்.  மாவட்ட மகளிர் திட்ட அதிகாரிகள் தலைமையில் தொழில் அதிபர்கள் வியாபாரிகள் கூட்டமைப்பினர், குடியிருப்பாளர் சங்கம், குடும்பஸ்ரீ மற்றும் அயல் கூட்டங்கள் இணைந்து இந்த இரவுநடையை சிறப்பாக்கின. இதனுடன், இரவு ஷாப்பிங்கும் நடந்தது.