tamilnadu

ஒரே நாளில் 2,397 பேருக்கு கோவிட்

திருவனந்தபுரம்:
கேரளத்தில் சனிக்கிழமையன்று ஒரே நாளில் 2397 பேர் கோவிட் நோய் தொற்றுக்கு உள்ளாயினர். இதில் 2137 பேருக்கு தொடர்பு மூலம் தொற்று ஏற் பட்டுள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். கோவிட் ஆய்வுக்கூட்டத்திற்கு பிறகு சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் அவர் மேலும்கூறியதாவது:

கோவிட் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த2225 பேர் இன்று (சனி) குணமடைந்தனர். திருவனந்தபுரம் மாவட்டத்தில் நோய் தீவிரமாக பரவுகிறது. ஒரே நாளில் இங்கு மட்டும் 408 பேர் நோய் பாதிப்புக்கு உள்ளாயினர். அதில் 49 பேருக்கான நோய் தொற்றிடம் தெரியாது. மலப்புறம், திரிச்சூர், கொல்லம் மாவட்டங்களில் தலா இரு நூறுக்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளனர்.மேலும் 3 கோவிட் மரணங்கள் சனிக்கிழமையன்று ஏற்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் இதுவரை கோவிட்டுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை280 ஆனது. தொடர்பு மூலம் அதிகமானோருக்கு நோய் தொற்றும் நிலையை கேரளம் எட்டியுள்ளது.நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரிக்காமல் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நோயாளிகள் எண் ணக்கை பெருமளவுக்கு அதிகரித்தால்மரணங்களும் அதிகரிக்கும். அப்போது நமது சுகாதாரஏற்பாடுகளால் கையாள முடியாது நிலை ஏற்படும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்று முதல்வர் கூறினார்.

;