tamilnadu

img

கேரளத்தில் அனைவருக்கும் இணைய வசதி 28,000 கிலோ மீட்டர் கோர் நெட் ஒர்க் சர்வே நிறைவு

திருவனந்தபுரம்:
கேரளத்தில் துவக்கவிருக்கும் கே போன் திட்டத்தின் மூலம் அனைவருக்கும் இணைய வசதி கிடைக்க உள்ளது. இதன் மூலம் 30 ஆயிரம் அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களும் பயனடைய உள்ளன. அதற்கான அடிப்படை கட்டமைப்பு பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவரது முகநூல் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: கேரளத்தின் கனவுத் திட்டமான கே போன் திட்டத்தின் அடிப்படை கட்டமைப்பு பணிகள் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் கே போன் திட்டம் என்றால்என்ன என்கிற கேள்வியை பலரும் முன்வைக்கிறார்கள். எனவே, அது குறித்த விவரங்களை கூற வேண்டியதாகிறது.

கே போன் திட்டம் என்றால் என்ன?
அனைவருக்கும் இணைய உரிமையை பிரகடனப்படுத்திய மாநிலம் கேரளமாகும். அது பிரகடனம் மட்டுமல்ல. அனைவருக்கும் இணையம் என்பது சாத்தியமாகும். அதற்காகவே கே போன் திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது.பிற்பட்ட பகுதிகளில் 20 லட்சம் குடும்பங்களுக்குஅதிவிரைவு இணையத் தொடர்பு இலவசமாகவழங்க கே போன் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதியினருக்கு குறைந்த கட்டணத்தில் இணையத் தொடர்பு வழங்கப்படும். திட்டம் எப்படி அமல்படுத்தப்படுகிறதுமாநிலத்தில் வலுவான ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் நிறுவப்பட்டுள்ளது. அதன் மூலமாக வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் அதிவேக இணையத் தொடர்பு வழங்குவதே திட்டம். கேஎஸ்இபியும் கேரள மாநில ஐ.டி.இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிட்டெடும் கூட்டாக இத்திட்டத்தை அமல்படுத்தும். பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிட்டெட் நிறுவனம் இதற்கான டெண்டர் எடுத்துள்ளது. 2020 டிசம்பரில் இத்திட்டத்தை நிறைவேற்றுவதே நோக்கம். இணைய சேவைக்கான புரொவைடர்லைசென்ஸ் உள்ளவர்களுக்கு இந்த திட்டத்தின்மூலம் அவர்களது சேவைகள் மக்களிடம் கொண்டு சேர்க்கவும் முடியும். கேபிள் டிவி முகவர்கள் அவர்களது சேவைகளை மிகுந்த தரத்துடன் மக்களுக்கு கொண்டு சேர்க்க கே போன் உதவும் வாய்ப்பும் இதில் உள்ளது.

கே போன் என்ன  விளைவை ஏற்படுத்தும்?
இணையத் தொடர்பை உரிமையாக அறிவித்த மாநிலம் என்பதால் கே போன்மூலம் அனைவருக்கும் அறிவின் வாயில் திறக்கும். இந்த துறையில் ஏகபோகம் தடுக்கப்படுவதுடன் மாநில அரசின் கட்டுப்பாட்டில்அனைத்து சேவை அளிப்போருக்கும் சமவாய்ப்புஅளிக்கும் ஆப்டிக்கல் பைபர் நெட்ஒர்க் அமலுக்கு வரும். மாநிலத்தின் கல்வித்துறை புரட்சிகரமான மாற்றத்தின் அடுத்த கட்டத்திற்கு செல்லும்.

ஐ.டி துறையில் பாய்ச்சல் வேகம்
செயற்கை நுண்ணறிவு, தடுப்புச் சங்கிலி, இணையத்தின் சங்கதிகள், தொடக்க நிலை தொழில் (ஸ்டார்ட் அப்) துறைகளில் பாய்ச்சல் வேக முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்களிலும் கல்வி நிறுவனங்களிலும் 10 mbpsமுதல் 1 gbps வேகத்தில் இணைய தொடர்புகிடைக்கும். அரசு சேவைகள் மேலும் டிஜிட்டல்மயமாகும். இ.ஹெல்த் போன்ற திட்டங்களை செயல்படுத்த முடியும். கேபிள் டி.வி, ஐ.டி. பார்க்குகள் விமான நிலையம், துறைமுகம் போன்ற இடங்களுக்கு அதிவிரைவு இணைப்புகிடைக்கும். போக்குவரத்து நிர்வாகத்திற்கான வசதிகள் எளிதாகும். கிராமங்களில் உள்ள சிறு தொழில்களில் மின்னணு வர்த்தகம் (இ-காமர்ஸ்) நடத்தலாம்.

திட்டத்தின் நிலை என்ன?
28,000 கிலோ மீட்டர் நீளத்தில் கோர் நெட் ஒர்க் சர்வே நிறைவடைந்துள்ளது. திட்டத்தின்மூலம் பயனடைய உள்ள அலுவலகங்களை இணைப்பதற்கான சர்வே நடைபெற்று வருகிறது. 2020 இறுதிக்குள் திட்டப்பணிகளை நிறைவு செய்து சேவை வழங்குவது அரசின் லட்சியம்.

;