tamilnadu

img

‘சில’ பார்சல்களை எடுக்க மட்டுமே சரித்துக்கு அழைப்பு... யுஏஇ தூதரக ஊழியர்கள் வாக்குமூலம்

திருவனந்தபுரம்:
யுஏஇ தூதரகத்துக்கு வரும் ‘சில’ பார்சல்களை எடுக்கமட்டுமே சரித் அழைக்கப்படுவார் என தூதரக ஊழியர்கள் என்ஐஏ அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.மக்கள் தொடர்பு அலுவலர் பதவியில் இருந்து சரித்தை நீக்கிய பின்னர், பொருட்களை எடுக்க தூதரக ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். இருப்பினும், சில பொருட்கள் வரும்போது,அந்த ஊழியர்களை தவிர்த்துவிட்டு சரித்தை ஈடுபடுத்தியதாக வாக்குமூலத்தில் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். பொருட்கள் எடுப்பதற்காக சரித் தனது சொந்த வாகனத்தைபயன்படுத்தியதாகவும் தெரிவித்தனர். சரித் பொருட்களை எடுத்துச் சென்ற நாட்களில், தூதரகத்தில் சொப்னாவின் தலையீடு இருக்கும். சரித்தை அழைப்பது வழக்கத்துக்கு மாறாக தங்களுக்கு தோன்றியதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தூதரகத்தில் 7 யுஏஇ குடிமகன்கள்
திருவனந்தபுரத்தில் உள்ள துணைத் தூதரகத்தில் ஏழுஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமகன்கள் உள்ளனர். மிக உயர்ந்த பதவி கான்சிலேட் ஜெனரல். இரண்டாவது செயலாளர். மீதமுள்ள ஐந்து பேர் நிர்வாக இணைப்புகளாவர் (அட்டாசே). துணைத் தூதர் இல்லாத நிலையில், அட்டாசே-களில் ஒருவர் பொறுப்பாளராக இருப்பார். அவர்கள் சாஸ்தமங்கலம் மற்றும் பி.டி.பி நகரில் வசிக்கின்றனர். தூதரகத்தில்இந்திய ஊழியர்கள் 22 பேர் உள்ளனர்.

சந்தீப் முக்கியமானவர்: சரித்தின் வழக்கறிஞர்
தங்கக் கடத்தல் வழக்கில் முதல் குற்றவாளியான சரித்தின்வழக்கறிஞர் கேசரி கிருஷ்ணன் நாயர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தங்கக் கடத்தலில் சந்தீப் நாயர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அதன் பின்னணியில் ஒரு பெரிய மோசடிகும்பல் இருப்பதாகவும் கூறினார். இந்த வழக்கில் ஐக்கிய அரபு எமிரேட் துணைத் தூதரகத்தின் தொடர்பு உள்ளது என்பதையும், ராஜீய பார்சல்களுக்குள் தங்கம் இருப்பதை சரித்அறிந்திருந்ததாகவும் அவர் கூறினார். சந்தீபும் சொப்னாவும் வெளியேறுவதற்கு முன்பு அவர்களுடன் சரித்தும் தன்னை சந்தித்ததாகவும் அவர் கூறினார்.மேலும் அவர் கூறுகையில், ஜுலை 4 ஆம் தேதி சட்ட உதவி கோரி தன்னை சந்திக்க சரித் வீட்டுக்கு வந்ததாக தெரிவித்தார். 5 ஆம் தேதி சரித் மீண்டும் வந்தார். தொடர்ந்து சரித்துடன் சொப்னாவின் குடியிருப்புக்கு சென்றோம். அங்கு சொப்னாவுடன் சந்தீப் நாயர் இருந்தார். காப்பாற்ற வேண்டும் என்று சொப்னா கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்தேஇருவரும் தலைமறைவாக சென்றனர். பின்னர் சுங்கத்துறைஅலுவலத்துக்கு செல்வதாக சரித் தொடர்பு கொண்டு தெரிவித்தார். உடனடியாக செல்லாவிட்டால் அட்டாசே சொப்னாவை சிக்க வைப்பார் என்று சரித் கூறியதாகவும் கிருஷ்ணன்நாயர் கூறினார்.

;