tamilnadu

img

பத்திரிகைச் செய்தியை நம்பி ஊழல் குற்றச்சாட்டு: ஆதாரம் இல்லை என ரமேஷ் சென்னித்தலா புலம்பல்

திருவனந்தபுரம், மே 23-  கேரளத்தில் 87 லட்சம் குடும்ப அட்டை உரிமையாளர்களின் தக வல்கள் ஸ்ப்ரிங்லர் நிறுவனத்திற்கு வழங்கியதாக தான் கூறிய குற்றச் சாட்டுகள் பத்திரிகை செய்திகளின் அடிப்படையிலானது எனவும் தன்னி டம் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் இல்லை எனவும் கேரள எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா புலம்பியுள்ளார். கேரளத்தில் கோவிட் நோயா ளிகள் வேகமாக அதிகரித்து வந்த  நிலையில் அதுகுறித்த தகவல் சேக ரிப்புக்கு உதவும் மென்பொருளை ஸ்ப்ரிங்லர் நிறுவனம் வழங்கியது. உலக சுகாதார நிறுவனத்துடன் தகவல் சேகரிப்பில் கைகோர்து செயல்படும் இந்த நிறுவனம் அமெ ரிக்கவாழ் மலையாளிக்கு சொந்தமா னது. ஆறுமாத காலத்துக்கு தங்களது மென்பொருளை இலவசமாக கேரளம் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தது. இதுகுறித்து சில மலையாள ஊடகங்களும், எதிர்கட்சி களும் பெரும் ஊழல் நடந்துள்ளதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறின.

 

                                            தகவல்கள் அழிப்பு

நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி தன்னிடம் இருந்த தகவல்கள் (டேட்டா) அனைத்தையும் அழித்துவிட்டதாக சனியன்று தாக்கல் செய்த வாக்குமூலத்தில் ஸ்பிங்லர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொ டுத்தனர். நீதிமன்றத்தில், அவசர காலத் தில் அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு  என்பதை கேரள அரசு தரப்பு தெளி வுபடுத்தியது. மென்பொருள் மட்டுமே ஸ்பிங்க்லர் தருகிறது, தக வல் சேமிப்பு முழுவதையும் தற்போது  கேரள அரசுதான் நிர்வகிக்கிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தகவல் கசிவுக்கான வாய்ப்பு இல்லை எனவும் உறுதிபட தெரி வித்தது. தேசிய தகவல் மையத்தி டம் கோவிட் தகவல் சேகரிப்புக்கான  மென்பொருள் நிறுவ உதவுமாறு  கேரள ஐடி துறை கேட்டுக்கொண்டது. அது தொடர்பாக எழுதிய 3 கடி தங்களுக்கு தேசிய தகவல் மையம் (என்ஐசி) பதிலளிக்காததையும் கேரள அரசு நீதிமன்றத்தில் தெரி வித்தது. அதன் அடிப்படையில் ஸ்பி லிங்லர் சேவைக்கு தடை விதிக்க நீதி மன்றம் மறுத்துவிட்டது. அதே நேரத்தில் ஸ்ப்ரிங்களரிடம் உள்ள தக வல்களை அழித்துவிடுமாறும் இடைக்கால உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்தது.

முதலில் கோவிட் நோயாளிக ளின் தகவல்களை மருந்து கம்பெனி களுக்கு ஸ்பிரிங்லர் விற்றுள்ளதாக சில ஊடகங்களும். எதிர்கட்சியும் குற்றம் சாட்டின. அதை தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களின் விவ ரங்கள் ரூ.200 கோடிக்கு ஸ்ப்ரிங்ல ருக்கு  விற்கப்பட்டதாகவும் குற்றம்சா ட்டின. எவ்வித அடிப்படை ஆதார மும் இல்லாத இந்த குற்றச்சாட்டு களை கேரள மக்கள் ஏற்கவில்லை. இதை உணர்ந்து கொண்ட எதிர் கட்சி தலைவர் ரமேஷ் சென்னித் தலா இப்போது கூறுகிறார், “கேரளத் தின் பிரபல நாளிதழில் வந்த செய்தி யின் அடிப்படையில் நான் குற்றச்சா ட்டுகளை முன்வைத்தேன். சில டே ட்டாக்களை பயன்படுத்துகிறார்கள் என்று அவர்கள் (நாளிதழ்) பின்னர்  தெரிவித்தனர்.

அது பயன்படுத்தப்பட வில்லை என அரசு கூறும்போது ஓக்கே. நான் ஏற்றுக்கொள்கிறேன். எதிர்கட்சியின் கைகளில் உள்ள விவரங்களின் அடிப்படையில் நாங்கள் கூறுகிறோம். அது ஊடகங்களில் வெளியிடப்பட்டவை. அதல்லாமல் எங்களது கைகளில் ஆவணங்கள் ஒன்றுமில்லை. நாங்கள் என்ன செய்ய?” என செய்தியாளர் சந்திப் பில் ரமேஷ் சென்னித்தலா புலம்பி னார்.

 

;