ஆசிய மண்டல தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மகளிர் 51 எடை பிரிவில் 6 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரிகோம் பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஐரிஷ் மாக்னோவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியின் மூலம் வரும் ஜூலை மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்றார். இதே போல இந்தியாவின் சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ) ஒலிம்பிக் தொடருக்குத் தகுதி பெற்றுள்ளார். மேலும் ஆஷிஷ் குமார், சதீஷ்குமார் ஆகியோரும் ஒலிம்பிக் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.