அகமதாபாத், மே 17- குஜராத் மாநிலம ராஜ்கோட் மாவட்டத்தில் ராஜ்கோட்டின் ஜங்லேஷ்வர் பகுதியில் உள்ள உள்ள கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ள தடுப்புகளை உள்ளூர் மக்கள் அகற்ற முயன்ற தாகக் கூறப்படுகிறது. இதனால் மக்களுக்கும் காவல்துறை யினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் காவல்துறையினர் ஆறு ரவுண்டு கள் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ராஜ்கோட் பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கபட்டிருப்பதாகவும், அங்கு ஏராளமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டி ருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய உள்ளூர் மக்கள் 68 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து பக்திநகர் காவல் ஆய்வாளர் வி.கே.காத்வி கூறுகை யில், “ கட்டுப்பாட்டு மண்டலத்தின் கீழ் உள்ள வேறு சில பகுதிகளில் தடுப்புகள் அகற்றப்பட்டு வருகின்ற நிலையில், உள்ளூர் அதிகாரி கள் தங்கள் பகுதியில் உள்ள தடுப்புகளை அகற்றாததால், மக்கள் கோபமடைந்துள்ளனர்” என்றார்.