tamilnadu

img

சூரத்தில் வருமான வரி வசூல் 20 சதவிகிதம் குறைந்தது!

சூரத், ஏப்.8-பணமதிப்பு நீக்கம்,ஜிஎஸ்டி போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் முக்கியமானதாகும். ஜவுளி ஏற்றுமதி மூலம் அந்நியச் செலாவணி ஈட்டி வந்த அந்தமாநிலத்தின் வியாபாரிகள், தொழிலை இழந்து நடுத்தெருவிற்கு வந்தனர். பல லட்சம் பேர் வேலையிழந்தனர். பாஜகதலைவர்கள் மறுத்து வந்தாலும் இதுவே உண்மையாக இருந்தது. இந்நிலையில், குஜராத்தின் வர்த்தக நகரமான சூரத்தில், 2018-19 நிதியாண்டில் மட்டும், 20 சதவிகிதம் அளவிற்கு வருமான வரி வசூல் குறைந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சூரத்தில் கடந்த 15 ஆண்டுகளில், சுமார் 20 சதவிகிதம் அளவிற்கு வருமான வரி வசூல் குறைந்தது இதுதான் முதல்முறை என்றும் கூறப்படுகிறது. 2018-19 நிதியாண்டில், ரூ. 4 ஆயிரத்து 665 கோடிஅளவிற்கு வருமான வரி வசூலாக வேண்டும். ஆனால், இதுவரை ரூ. 3 ஆயிரத்து 737 கோடி மட்டுமே வசூலாகிஇருக்கிறது. ரூ. 928 கோடி அளவிற்கு வசூல் குறைந் துள்ளது.இதில் அதிகபட்சமான நிலுவைத் தொகை, ‘வரம்பு- 3’என்ற பிரிவிலேயே வருவதாகவும், இந்த பிரிவுக்குள்தான் சூரத் வைர வியாபாரிகள் வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

;