tamilnadu

img

குஜராத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட தலித்துக்களின் திருமண ஊர்வலங்கள்

அகமதாபாத்:

குஜராத்தல், தலித் இளைஞர்களின் திருமண ஊர்வலங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், அவர்கள் மீது சாதி ஆதிக்க வெறியர்கள் கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவங்களும் நடத்தியுள்ளன.


குஜராத் மாநிலம், ஆரவல்லி மற்றும் சபர்கந்தா மாவட்டங்களில் இந்த தீண்டாமைக் கொடுமைகள் அரங்கேறியுள்ளன.குஜராத் மாநிலம், ஆரவல்லி மாவட்டத்திற்கு உட்பட்டது, கம்பியாஸ்ர் கிராமம். இங்கு தலித் இளைஞர் மற்றும் அவரது உறவினர்கள் ஊர்வலமாக சென்றபோது, அதற்கு அங்குள்ள ஆதிக்க சாதியினரான பட்டிதார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தி, மிகக் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். 


பின்னர், தலித் மணமகன் ஊர்வலம் வந்த பாதை தீட்டுப்பட்டு விட்டதாக கூறி, ‘தீட்டு கழிக்கிறோம்’ என்று, ஹோமங்களையும் நடத்தியுள்ளனர்.இதேபோல சபர்கந்தா மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில், தாக்குர் சமூக மக்கள், தலித் சமூகத்தைச் சேர்ந்த மணமகன், உள்ளூர் கோயிலில் வழிபட எதிர்ப்பு தெரிவித்ததுடன், தங்கள் கிராமத்து வழியே, தலித் மணமகன் குதிரை மீது ஏறிச் செல்லக் கூடாது என்றும் கூறி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.


எனினும், இங்கு மணமகன் குடும்பத்தினர், அச்சுறுத்தலுக்கு பணிந்து போகாமல், காவல்துறை பாதுகாப்பைப் பெற்று, திட்டமிட்டபடி மணமகன் ஊர்வலத்தை நடத்தியுள்ளனர். கோயிலிலும் வழிபட்டுள்ளனர்.