india

img

தலித் (7.3%) பழங்குடிகளுக்கு (26%) எதிராக குற்றங்கள் அதிகரிப்பு.... நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்...

புதுதில்லி:
2019-ஆம் ஆண்டில் இந்தியாவில்பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மக்களுக்கு இழைக்கப்படும் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக, மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி நாடாளுமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளார்.

மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி. மல்லிகார்ஜூன கார்கே எழுப்பிய கேள்விக்கு ஒன்று இணையமைச்சர் கிஷன் ரெட்டி பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“இந்தியாவில் பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு எதிராகக் கடந்த 2019-ஆம் ஆண்டில் குற்றங்கள் அதிகரித்துள்ளன என்பது உண்மைதான். 2019-ம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக்காப்பக அறிக்கையின்படி, பட்டியல்வகுப்பு மக்களுக்கு எதிரான குற்றங் கள், அதன் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 7.3 சதவிகிதமும், பழங்குடி மக்களுக்கு எதிரான குற்றங்கள் 26.5 சதவிகிதம் அதிகரித்துள்ளன.அரசியலமைப்புச் சட்டத்தின் 7-வது அட்டவணையின்படி, போலீஸ், பொதுச் சட்டம் ஆகியவை மாநிலஅரசுகளின் கட்டுப்பாட்டில் வருகிறது.சட்டம் ஒழுங்கைப் பராமரித்தல், மக்களின் சொத்துகள், உயிரைப் பாதுகாத்தல், விசாரணை நடத்துதல், பட்டியல்மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர்களை விசாரணை செய்து நீதியின் முன்நிறுத்துதல் என்பது மாநில அரசுகளின்
கடமை.
அதேசமயம், பழங்குடி மற்றும் பட்டியல் வகுப்பு மக்களை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் (2015-ல் திருத்தப் பட்டது) கீழ் பாதுகாக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கும் இருக்கிறது.இந்தத் திருத்தப்பட்ட சட்டத்தில் புதிய வகையான குற்றங்கள், தண்டனைகள், விசாரணையை வலுப்படுத்துதல், சிறப்பு நீதிமன்றம் அமைத்தல், சிறப்பு வழக்கறிஞர்களை நியமித்தல் ஆகிய பிரிவுகள் உள்ளன.பட்டியல் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனியாக சிறப்பு நீதிமன்றம் அமைக்கலாம். குற்றங்களின் தன்மையை அறிந்து, வழக்குப் பதிவு செய்த நாளில்இருந்து விசாரணையை 2 மாதங்களுக்குள் நீதிமன்றத்தால் முடிக்க முடியும்”இவ்வாறு கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.