tamilnadu

img

20 ஆண்டுகளாக சீரமைக்காத சாலை

கிருஷ்ணகிரி, ஜன.1- ஓசூர் ரயில் நிலையம் பின்பு றம் குமரன் நகர் முகப்பில் அமைந்  துள்ளது கிருஷ்ணப்பா நகர்.இப்  பகுதியில் 500 க்கும் மேற்பட்ட வீடு கள், நெருக்கமான மக்கள் தொகை கொண்ட தொழிலாளர் கள் வசிக்கும் பகுதியாகும்.  கிருஷ்ணப்பா நகரின் இந்த  பிரதான சாலை வழியே தான் கும ரன் நகர், செயின்ட் மேரிஸ் காலனி,  அரசு கட்டிக் கொடுத்த வீட்டு வசதி  வாரிய குடியிருப்புகள் , பாரதி தாசன் நகர் தெற்குப் பகுதி உட்பட  மக்கள் இரு சக்கர, நான்கு சக்கர  வாகனங்களில் சென்று வர வேண்டியுள்ளது.  ஆனால் சாலை குண்டும் குழி யும், மண்மேடாகவும் மழை காலத் தில் மண் அறிப்பு ஏற்பட்டு ஓடை போலவும் காணப்படுகிறது. பொதுச் சாலையாகவும் பயன் பட்டு வரும் இந்த பழைய வீதி 20  ஆண்டுகளாக சீர்படுத்தப்படாமல்  பல விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் பல முறை ஓசூர் மாநகராட்சியில் மனு கொடுக்கப்பட்டும் அலுவலர்கள் சிறிதும் கண்டு கொள்ளவில்லை  இச்சாலையை மேடு பள்ளங்களை சமப்படுத்தி கழிவு நீர் கால்வா யும், தார்சாலையாகவும் உடனடி யாக அமைத்துததர வேண்டும்  என இப்பகுதியில் வசிக்கும் மார்க்  சிஸ்ட் கட்சி வட்டக் குழு உறுப்பினர் அஸ்கர்கான் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.

;