குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப் படுத்தக் கூடாது என வலியுறுத்தியும், பல்கலைக் கழகங்கள் மீது நடைபெறும் தாக்குதலை கண்டித்தும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே சனிக்கிழமை (பிப். 22) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பேரவைத் தலைவர் அய்ஷாகோஷ், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன், மாநில நிர்வாகிகள் ம.கண்ணன், க.நிருபன் சக்கரவர்த்தி, ஆறு.பிரகாஷ், தீ.சந்துரு, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் விக்னேஸ்வரன், வடசென்னை மாவட்டச் செயலாளர் இசக்கி நாகராஜ் உள்ளிட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.