கிருஷ்ணகிரி, மே 22-இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவராகவும், கட்சி பகுதிக்குழு உறுப்பினராகவும் 25 ஆண்டுகளுக்கு முன்பு அஞ்செட்டி பகுதியில் முன்னணி ஊழியராக செயல்பட்ட ஸ்ரீராம் விபத்தில் பலியானார். அவரது 25வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு வட்டச் செயலாளர் மாரப்பா தலைமை தாங்கினார். மாநில கட்சி கல்விக் குழு உறுப்பினர் சிசுபாலன், மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ஜெயராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சாம்ராஜ், சேகர், இருதயராஜ், சுரேஷ், தேன்கனிக் கோட்டை வட்டச் செயலாளர் வெங்கடேஷ், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் நாகேஷ் பாபு நிர்வாகிகள் அனுமப்பா, கணேஷ், முத்து, தேவராஜன், திருத்தணி, சின்னசாமி, பிரகாஷ், மாதையன் காவேரி, கிருஷ் ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அவரது நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.