tamilnadu

img

மூத்த தோழர் தருமன் காலமானார்

கிருஷ்ணகிரி, ஜூலை 21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் செயற்குழு  உறுப்பினர் பாரூர் தோழர் எம்.தருமன் (71) திங்கட்கிழமை இரவு காலமானார். அவரது உடலுக்கு மாவட்டச் செயலா ளர் எஸ்.ஆர்.ெஜயராமன், செயற்குழு உறுப்பினர் நஞ்சுண்டன், மாவட்டக் குழு உறுப்பினர் இள வரசன், வட்டச் செயலாளர்கள் சின்னராஜ், கிருஷ்ணகி ராஜா,  விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் எஸ்.பி.சின்னச்சாமி,  நிர்வாகிகள் மாதலிங்கம் உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்  நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன், ஆகியோர் தொலைபேசி மூலம் தோழர் தருமன்  குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மறைந்த தருமன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவராக செயல்பட்டவர். தனது இறுதி  மூச்சு உள்ளவரை விவசாயிகளுக்காகவும், தொழிலாளர்க ளுக்காகவும் குரல் கொடுத்தவர்.

;