tamilnadu

img

சத்துணவு சாப்பிட்ட மாணவர்கள் அரசு மருத்துமனைகளில் அனுமதி

கிருஷ்ணகிரி, ஆக. 3- தேன்கனிக்கோட்டை வட்டம் திப்பசந்தி ரம் அரசு உயர்நிலை பள்ளியில் 207 மாண வர்கள் படிக்கின்றனர். வெள்ளிக்கிழமை யன்று பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாண வர்களுக்கு வாந்தி, வயிற்று வலி, மயக்கம்  ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பாதிப்ப டைந்த 117 மாணவர்கள் உடனடியாக தேன் கனிகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு  போதிய இடமின்மையால் 47 மாணவர்கள் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பபட்டுள்ளனர்.  தகவல் அறிந்து தேன்கனிக்கோகோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் சேகர், நிர்வாகிகள் அனுமப்பா, முத்து, கணேசன் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று உயர் மருத்துவ  சிகிச்சை அளிக்குமாறு  அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டனர். ஓசூர் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருந்த 47 மாணவர்களை இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஸ்ரீதர், செயலாளர் சுரேஷ், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா  மேரி ஆகியோர் சென்று  ஆறுதல் கூறி னார்கள்.