tamilnadu

img

பெயர்தான் சிங்காரப்பேட்டை... சாலையோ?

கிருஷ்ணகிரி.ஊத்தங்ரை யிலிருந்து 9கி.மீ தூரத்தி  லும், கிருஷ்ணகிரியி லிருந்து 60கி.மீ தூரத்திலும் திரு  வண்ணாமலை மாவட்ட எல்லை யில் சிங்காரப்பேட்டை உள்ளது. இந்த ஊராட்சியில் 13 500  வாக்காளர்களும் அரசின்  கணக்கெடுப்பில் விடுபட்ட வர்கள் உட்பட 20 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட வர்கள் வாழ்கின்றனர். திருப்பத்தூர், ஊத்தங்கரை இரு சாலைகளிலும், மூன்றம்பட்டி, மிட்டப்பள்ளியிலும் நிகழற்குடை இல்லாததால் பேருந்துக்காக காத்திருப்பவர்கள் கடும் வெயில், மழையை தாங்கித்தான் நிற்க வேண்டியுள்ளது.  பேருந்து நிலையம் அரு கில் தனியார் மெட்ரிக் பள்ளி,  காவல் நிலையம், அரசு பெண்கள்  மேல்நிலைப் பள்ளி செல்லும் சாலை பல ஆண்டுகளாக குண் டும் குழியும், புழுதியுமாகவும், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து நடந்து செல்லவே முடியாத நிலை யில் உள்ளது.1500 க்கும் மேற்பட்ட  மாணவிகள் உட்பட இரு சக்கர நான்கு சக்கர வாகனங்ள் தினமும்  இந்த சாலையில் அரை கி.மீ  கடந்து போய் வர வேண்டி யுள்ளது. திருப்பத்தூதூர் சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலை யத்தில் 3 மருத்துவர்ககள், ஐந்து  செவிலியர்கள் பகல் நேரத்தில் மட்டுமே உள்ளனர். அவசர சிகிச்சை, எக்ஸ்ரே, ஸ்கேனிங், ரத்தம், சிறுநீர் பரிசோதிக்கும் வசதி எதுவும் இல்லை.ஊத்தங்  கரை வட்ட அரசு மருத்துவ மனையிலும் இந்த வசதிகள் எதுவும் இல்லை என்பதால் சிங்கா ரப்பேட்டை ஏழை மக்கள் உடல்  நலம் பாதித்தால் கடன்  வாங்கி தனியார் மருத்துவ மனைகளுக்கும், பரிசோதனை கூடங்களுக்கும் தான் செல்ல  வேண்டும். அவசரம் என்றால்  கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கு 60 கி.மீ பேருந்தில் பயணிக்க முடியாமல் பல நேரங்களில் இறக்க நேரிடுகிறது. இதனால் கடும் அவதிக்கும்,மன உளைச்சலுக்கும் உள்ளாகி வருகின்றனர்.  இப்பகுதியில் தலித், பழங் குடி, இருளர், மலைவாழ், குறவர்  இன மக்கள் அதிகம் வசிப்பதா லும், பொருளாதார ரீதியாகவும் மிகவும் பின் தங்கிய பகுதியாக வும் இருப்பதால் விழாக்கள் திரு மணம், காதுகுத்து, பிறந்த நாள்,  உட்பட அனைத்து குடும்ப விழாக்  களும் நடத்த ஆசை இருந்தா லும் அரசின் சமூகக் கூடம்  இல்லாததால் அதிக பொருட்  செலவு செய்யவும் முடியாத தால், வீடுகளிலேயே யாருக்கும்  தெரியப்படுத்தாமல் மிக சுறுக்கமாக நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பி னரும், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினருமான கோவிந்தசாமி, சிங்காரப் பேட்டை பகுதி செயலாளர் எத்தி ராஜா, வட்டக் குழு உறுப்பினர்கள்  குப்பன், சபாபதி, வாலிபர் சங்க  நிர்வாகிகள் தங்கபாலு, வெங்க டாசலம் மாதர் சங்க நிர்வாகிகள் சங்கீதா, லஷ்மி உட்பட ஊத்தங்  கரை வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கோரிக்கைகள்
சிங்காரப்பேட்டை பேருந்து  நிலையம் முன்பு ஊத்தல்கரை, திருப்பத்தூர் சாலைகளிலும் மூன்றம்பட்டி, மிட்டப்பள்ளியிலும் நிழற்குடைகள் அமைக்க வேண்டும், ஆரம்ப சுகாதார நிலை யத்தை 25 ஆயிரம் மக்கள்  தொகைக்கேற்ப மருத்துவர் கள், ஊழியர்கள், பரிசோதனை, எக்ஸ்ரே கூடங்களுடன் அரசு  மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், காவல்நிலை யம் அரசு பெண்கள் மேல் நிலை  பள்ளி வரை தார்சாலை அமைக்க  வேண்டும். ஏழை மக்களுக்கு பயன்படும் விதமாக சமூக நலக்  கூடம் அமைக்க வேண்டும் என  வட்டாட்சியரிடம் வலியுறுத்தி யுள்ளனர்.  விரைவில் இந்த கோரிக்கை களுக்கு தீர்வு காணப்பட வில்லையெனில் இப்பகுதி மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என செயற்குழு உறுப்பினர் கோவிந்தசாமியும், வட்ட செயலாளர் எத்திராஜூம் தெரிவித்தனர்.