tamilnadu

img

கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகள் 1980களில் இருந்ததைவிட 6 மடங்கு வேகத்தில் உருகுவதாக ஆய்வில் தகவல்

கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகள் 1980களில் இருந்ததைவிட 6 மடங்கு வேகத்தில் உருகுவதாக ஆய்வு ஒன்றின் தகவலில் வெளியாகியுள்ளது.


உலகின் மிகப்பெரிய தீவாக கூறப்படும் கிரீன்லாந்து மிகப்பெரிய பனிப்பாறைகளாலும், பனிபரப்புகளாலும் சூழ்ந்து அமைந்துள்ளது. உலகம் முழுவதும் காடுகள் அழிக்கப்படுவதாலும், இயற்கைக்கு எதிரான வளர்ச்சிகளாலும் புவிபரப்பு வெப்பமடைந்து வருகிறது. இதுகுறித்து பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும், விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் வருகின்றன.


இந்நிலையில், நேஷ்னல் அகாடமி ஆப் சைன்ஸ்சஸ் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் அறிக்கையில் கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகள் 1980களில் இருந்ததைவிட 6 மடங்கு வேகத்தில் உருகுவதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி கிரீன்லாந்தில் 1980-1990 ஆம் ஆண்டுகளின் இடைவெளியில் 51 பில்லியன் டன் பனிப்பாறைகள் உருகி கடலில் கலந்துள்ளன. அதேசயத்தில் 2010-2018 ஆம் ஆண்டுகளின் இடைவெளியில் 286 பில்லியன் டன் பனிப்பாறைகள் என அதிகளவில் உருகி கடலில் கலந்துள்ளன என கூறப்பட்டுள்ளன.


;