tamilnadu

img

6 வார காலங்களுக்கு கிரிக்கெடில் இருந்து விலகுகிறார் ரெய்னா

முழங்கால் அறுவை சிகிச்சை காரணமாக 6 வார காலங்களுக்கு கிரிக்கெட்டில் இருந்து சுரேஷ் ரெய்னா விலகியுள்ளார்.

ஆம்ஸ்டர்டாமில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சுரேஷ் ரெய்னாவுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதனையடுத்து அவர் மீண்டு வர குறைந்தது 6 வார கால புனரமைப்பு சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பயிற்சிகள் தேவைப்படுவதால் கிரிக்கெட்டில் இருந்து குறுகிய காலத்துக்கு சுரேஷ் ரெய்னா விலகியுள்ளார். இதனால், அவர் 2019-20-ல் நடைபெற உள்ள உள்நாட்டுத் தொடர்களில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.