tamilnadu

img

டிரெண்டிங் வாய்ஸ்... ராகுல் டெஸ்ட் போட்டிக்கு தேவையில்லை

உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகள் உடனான சுற்றுப்பயணத்தில் விளையாடியது. இந்த வகையான சுற்றுப்பயணத்தில் இந்திய அணி பலவற்றில் முன்னேற்றமடைவது அவசியம். வீரர்களின் பங்களிப்பையும் விவாதிக்க வேண்டும். தொடக்க வீரர்கள் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும். மயாங்க் அகர்வால் நன்றாக விளையாடி வருகிறார். அவருக்குக் கூடுதல் வாய்ப்பு அளிக்க வேண்டியது அவசியம். மற்றொரு தொடக்க வீரரான லோகேஷ் ராகுல் பேட்டிங் நிலையாக இல்லை. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் லோகேஷ் ராகுலுக்கு பதிலாக ரோஹித் சர்மாவைத் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறக்கி முயற்சித்து பார்க்கலாம். இந்த வாய்ப்பை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கங்குலி அளித்த பேட்டியிலிருந்து... 

;