tamilnadu

img

இன்றைய ஆட்டங்கள் : இங்கிலாந்து - வங்கதேசம்

இங்கிலாந்து - வங்கதேசம்

வெற்றி  60% :  40% வாய்ப்பு

இடம் : கார்டிப்  
நேரம் : பிற்பகல் 3 மணி

இரு அணிகளையும் ஒப்பிடுகையில் இங்கிலாந்து அணி சற்று பலமானது என்பதால் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆனால் உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணியை எளிதில் கணிக்க முடிய வில்லை. பந்துவீச்சில் 8 ஓவர்க ளுக்கு ஒருமுறை ஆட்டத்திறனை மாற்றி மாற்றி விளையாடுகிறார்கள். பேட்டிங்கில் சற்று திணறினாலும் பந்துவீச்சு, பீல்டிங்கில் துடிப்பாகத் துள்ளுகின்றனர். இதனால் இங்கிலாந்து அணி வீரர்கள் பொறுப்புடன் விளையாடினால் மட்டுமே சிரமமில்லாமல் வெற்றியைக் குவிக்க முடியும். தொடர் தோல்வியிலிருந்து விடுபட இங்கிலாந்து அணியை இரையாக்க வங்கதேச அணி காத்துக்கொண்டிருக்கிறது என்பதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடுகளம்
வேல்ஸ்க்கு சொந்தமான இந்த மைதானம் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும். ரன் குவிப்பது சிரமம்  தான் என்றாலும் சீதோஷ்ண நிலை மாறுபாடு அதிகம் இருப்பதால் பந்துவீச்சு எப்படி இருக்கும் எளிதாகக் கூற முடியாது.

;