தற்போதைய உலகக்கோப்பை சீசனில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய 4 அணிகள் மட்டுமே பொறுப்புடன் விளையாடி வருகிறது. இலங்கை, பாகிஸ்தான் அணிகள் பேட்டிங்கில் மட்டும் கலக்குகின்றனர். மற்ற பிரிவுகளில் சொதப்புகின்றனர். விண்டீஸ், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் தோல்வியில் சாதனை படைத்தாலும் ஆட்டத்திறனில் பரவாயில்லை. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தென் ஆப்பிரிக்கா அணி இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்டு விழிக்கிறது. குறிப்பாகப் பாகிஸ்தான் அணி பீல்டிங்கில் சிறுவர்களைப் போல் விளையாடுகிறது.