உலகக்கோப்பை தொடரின் 12-வது சீசனில் வங்கதேச அணி சிறப்பாக விளையாடினாலும் முன்னணி அணிகளிடம் படுதோல்வியைச் சந்தித்து லீக் சுற்றோடு வெளியேறியது. இந்நிலையில் லீக் சுற்றோடு வெளியேற்றப்பட்டதால் வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கம் செய்தது. வங்கதேச அணி சொந்த நாட்டுக்குத் திரும்பிய மறுநாளே ஸ்டீவ் ரோட்ஸ் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டீவ் ரோட்ஸ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தான் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.