வெள்ளியன்று நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் பலமான தென் ஆப்பிரிக்கா அணி கத்துக்குட்டி அணியான தாய்லாந்து அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. தொடக்க வீராங்கனை லிஸ்ஸெல்லியின் (101) அதிரடி சதத்தின் உதவியால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகவும் கடினமான இலக்குடன் களமிறங்கிய தாய்லாந்து அணி தென் ஆப்பிரிக்க வீராங்கனைகளின் துடிப்பான பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 19.1 ஓவர்களில் 82 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது. மேலும் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ரன் குவித்த அணி என்ற சாதனையைத் தென் ஆப்பிரிக்கா படைத்தது.