ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்மித் நடப்பு சீசன் ஆஷஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், தொடர்ச்சியாக ஆஷஸ் 10 இன்னிங்ஸில் 1251 ரன்கள் குவித்து பிராட் மேனின் (1236 ரன்கள்) 71 ஆண்டுகால சாதனை யைத் தகர்த்தார். மேலும் ஒரு அணிக்கெதிராக தொடர்ந்து 10 அரை சதங்களை அடித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் (9 அரைசதம் - இங்கி லாந்து) சாதனையை ஸ்மித் (10 அரைசதம் - இங்கி லாந்து) முறியடித்துள்ளார். பந்தை சேதப்படுத்திய சர்ச்சையால் பல்வேறு தரப்பிலிருந்து கேலி கிண்டலுக்கு உள்ளான ஸ்மித் தின் கிரிக்கெட் வாழ்க்கை உப்புத்தாளால் கரைந்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பீனிக்ஸ் பற வையைப் போல திடீர் எழுச்சி பெற்று கிரிக்கெட் உலகைத் தனது சாதனை என்னும் கரங்களால் கட்டிப்போட்டுள்ளார்.