2008 - 2012-ஆம் ஆண்டிற்கிடையேயான காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளராக வலம் வந்த பிரக்யான் ஓஜா அனைத்து விதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாகஅறிவித்துள்ளார். 33-வயதான பிரக்யான் ஓஜா ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர். 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 113 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.18 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளையும், 6 டி-20 விளையாடி 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும் ஐபிஎல் மற்றும் முதல் தர போட்டிகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ள 2013-ஆம் ஆண்டி லிருந்து தேசிய அணிக்குத் தேர்வாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.