இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனைகள் மிதாலி ராஜ், ஹர்மன்ப்ரீத், வேதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல வீரர் - வீராங்கனைகள் கலந்து கொள்ளும் கலப்பு பாலின டி-20 (கண்காட்சி) ஆட்டம் நடை பெற இருப்பதாக விளம்பரம் ஒன்று இணையத்தில் வைரலாகி வரு கிறது. இந்த விளம்பரத்தை ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்க ளூரு (ஆர்சிபி) #ChallengeAccepted என்கிற ஹேஸ்டேக் மூலம் பிரச்சாரத்தை முன்னிறுத்தி வருகிறது. முதல்முறையாக ஆண்-பெண் என இரு பாலினரும் கிரிக்கெட் ஆட்டத்தில் விளையாடுவது மிகுந்த எதிர்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்தக் கண்காட்சி ஆட்டத்துக்கு பிசிசிஐ அனுமதி மறுத்துள்ளது. ஆர்சிபி நிர்வாகத்தின் சிறப்புக் கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழு நிராகரித்துள்ளது. பிசிசிஐ ஒப்பந் தத்தில் உள்ள வீரர் - வீராங்கனைகள் கண்காட்சி ஆட்டத்தில் இடம்பெற விதிமுறைகளில் இடமில்லை எனக்கூறி விளக்கமளித்துள்ளது.