tamilnadu

img

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மிஸ்பா?

சமீபத்தில் நிறைவுபெற்ற உலகக்கோப்பை தொடருடன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி யின் பயிற்சியாளர்கள் பதவிக்காலம் நிறைவடைந்த தையடுத்து புதிய பயிற்சியாளர் தேர்வுக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை தொடரில் தலைமை பயிற்சி யாளராக இருந்த மிக்கி ஆர்தரை  மீண்டும் தலைமை பயிற்சியாளராக நீட்டிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரி யம் விரும்பவில்லை என செய்திகள் கசிந்துள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மோசின் ஹசன் கான் மற்றும் ஆஸ்தி ரேலிய அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் ஆகிய மூவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.  இவர்களில் மோசின் கானுக்கு வயது (64) அதிக மாக இருப்பதால் அவருக்கு வாய்ப்பு குறைவு தான். அதே போல வெளிநாட்டு பயிற்சியாளர்களால் தான் பாகிஸ்தான் அணி சமீப காலமாகச் சொதப்பி வரு கிறது என அந்நாட்டு   கிரிக்கெட் வாரியம் வெளிப்படை யாகக் கருதுவதால் டீன் ஜோன்ஸ்க்கு  வாய்ப்பில்லை என்று தெரிகிறது.  மிகுந்த பொறுமைசாலியும், பாகிஸ்தான் தோனி யுமான மிஸ்பா உல் ஹக் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதி என அந்நாட்டு  கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும் உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

;