tamilnadu

img

இந்தியா-நியூசி ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக மயங்க் அகர்வாலுக்கு இடம்

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில், இந்தியா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதில் 5வது டி20 போட்டியின் போது, ரோஹித் சர்மாவுக்கு தசை பிடிப்பு ஏற்பட்டு, ஆட்டத்தின் போது வெளியேறினார்.  இதை அடுத்து, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா தசை பிடிப்பு காரணமாக விலகியுள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்தது. 

இந்நிலையில், ரோகித் சர்மாவிற்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அதே போல் ரஞ்சி போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் பிரித்வி ஷா மற்றும் சுப்மான் கில் ஆகியோரும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இடம்பிடித்துள்ளனர்.  இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணியுடன் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.