tamilnadu

img

தென் ஆப்பிரிக்கா வீரர் ஜேபி டுமினி ஓய்வு  அறிவிப்பு

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி வீரரான ஜேபி டுமினி, ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் ஆல்-ரவுண்டரான ஜேபி டுமினி, கடந்த 2017-ல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 35 வயதாகும் டுமினி, 46 டெஸ்ட் போட்டிகளில் 2103 ரன்களும், 199 ஒருநாள் போட்டிகளில் 5117 ரன்களும், டி20 போட்டிகளில், 1934 ரன்களும் அடித்துள்ளார். இந்நிலையில் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தற்போது அறிவித்துள்ளார்.
 

;