சர்வதேச டி20 போட்டிகளில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சாதனை படைத்துள்ளார்
நியூசிலாந்தின் மவுண்ட் மாங்கானு நகரில் நேற்று நடைபெற்ற இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டி20 போட்டியில், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்தது. சர்வதேச டி20 போட்டிகளில், 5 போட்டிகளில் வெற்று பெற்று எதிரணி ஒயிட்வாஷ் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்நிலையில், இந்த போட்டியில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, புதிய உலக சாதனையை ஒன்றை படைத்துள்ளார்.
நேற்றைய ஆட்டத்தில் பும்ரா, 4 ஓவர்கள் வீசி வெறும் 12 ரன்களே விட்டுக்கொடுத்து, மூன்று முக்கிய விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதில் ஒரு மெய்டன் ஓவரும் அடங்கும். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் பும்ரா 7 மெய்டன் ஓவர்களை வீசி சாதனை படைத்தார். இதற்கு முன்னதாக சர்வதேச டி20 போட்டிகளில், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் குலசேகரா (58 போட்டிகள்) 6 ஓவர்கள் மெய்டனாக வீசியதே உலக சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.