tamilnadu

img

வெஸ்ட் இண்டீஸ் தொடர் : தவானுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்ப்பு

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் வரும் டிசம்பர் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணியில் ஷிகர் தவான் இடம் பிடித்திருந்தார். சையத் முஷ்டாக் அலி டிராபியில் டெல்லி அணிக்காக விளையாடிய போது, தவானுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அந்த காயம் குணமடைய அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளும் என்பதால் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கு முன் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெற்றிருந்தாலும் அவர் களமிறக்கப்படவில்லை.

;