tamilnadu

img

இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

இளையோர் உலகக் கோப்பை
 

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடை பெறும் இளையோர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 13-வது சீசன் அடுத்தாண்டு தென் ஆப்பிரிக்க நாட்டில் நடை பெறுகிறது. இந்த தொடரில் குரூப் “ஏ” பிரிவில் (ஜப்பான், நியூஸிலாந்து, இலங்கை) இடம்பெற்றுள்ள இந்திய அணி நடப்பு சாம்பி யன் அந்தஸ்தில்  கள மிறங்குகிறது. 

வீரர்கள் விபரம் 

பிரியம் கார்க் (கேப்டன்), துருவ் சந்த் (விக்கெட் கீப்பர்), யஷாஷ்வி ஜெய்ஸ் வால், திலக் வர்மா, திவ்யான்ஷ் சக்சேனா, ஷாஷ்வத் ராவத், திவ்யான்ஷ் ஜோஷி, சுபாங்க் ஹெக்டே, ரவி பிஷ்னோய், ஆகாஷ் சிங், கார்த்திக் தியாகி, அதர்வா அங்கோ லேகர், குமார் குஷாக்ரா (விக்கெட் கீப்பர்), சுஷாந்த் மிஷ்ரா, வித்யாதர் பாட்டீல்.

தமிழகம் புறக்கணிப்பு

விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி போன்ற உள்ளூர் தொடர்களில் இளம் வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் இறுதி வரை முன்னேறிய தமிழக அணி  நூலிழையில் கோப்பையை இழந்தது. தற்போதைய சூழ்நிலையில் தமிழக வீரர்கள் அனைவரும் சிறப்பான பார்மில் இருந்தும், இளையோர் உலகக்கோப்பை தொடருக்கு அறிவிக்கப்பட்டுள்ள வீரர்கள் பட்டியலில் ஒரு தமிழக வீரர் பெயர் கூட இல்லை. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்காக மத்தியில் ஆளும் பாஜக அரசு, பள்ளியில் நடக்கும் நிகழ்வுகள் முதல் பயணம் செய்யும் ரயில் வரை அனைத்திலும் தமிழக மக்கள் வஞ்சித்து வருகிறது. தற்போது ஒருபடி மேலே சென்று கேளிக்கை அம்சமான கிரிக்கெட் விளையாட்டிலும் தமிழக வீரர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.