tamilnadu

img

இந்திய மகளிர் அணி அசத்தல்

மே.இ.தீவுகளுக்கு எதிரான டி-20 தொடர் 

மேற்கு இந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது டி-20 தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரின் முதல் 3 ஆட்டங்களின் முடி வில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஹாட்ரிக் வெற்றி யை ருசித்து தொடரைக் கைப் பற்றிய நிலையில், 4-வது டி-20 போட்டி கயானாவில் ஞாயிறன்று (இந்திய நேரப் படி திங்களன்று காலை) நடைபெற்றது.

டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. மழை காரணமாகப் போட்டி 9 ஓவராக குறைக்கப்பட்ட நிலையில், முதலில் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே திணறி யது. பின் வரிசை வீராங்கனை  பூஜா (10) மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்  எடுத்தார். மற்ற  வீராங்கனைகள் அதிரடிக்கு ஆசைப்பட்டு ஒற்றை இழக்க எண்ணில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 9 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்தது. 

54 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின மான இலக்குடன் களமிறங் கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 9 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 45 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி யைத் தழுவியது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக் கிறது. பொதுவாக மேற்கு இந்தியத் தீவுகள் மகளிர் அணி டி-20 போட்டிகளை விரும்பி விளையாடும் என்ப தால் வெற்றியில் புதிய வர லாறுடன் நல்ல பார்மில் இருக்கும். ஆனால் எல்லாம் மாறி தற்போது சொந்த மண்ணில் இந்திய அணி யிடம் அடிமேல் அடி வாங்கிக் கொண்டிருக்கிறது. 
 

;