tamilnadu

img

அபராதப் புள்ளிகளைக் குவிக்கும் கோலி தடை விதிக்க காத்திருக்கும் ஐசிசி

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி டி-20, டெஸ்ட் என இரண்டு விதமான போட்டிகளைக் கொண்ட தொட ரில் பங்கேற்க இந்தியாவிற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தற்போது டெஸ்ட் தொடருக்குத் தயாராகி வருகிறது.    முன்னதாக 3 போட்டிகளை டி-20 தொடரில் இரு அணிகளும் ஆளுக்கொரு வெற்றி யை (ஒரு ஆட்டம் மழையால் ரத்து) ருசித்து 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இந்த டி-20 தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணி பேட்டிங் இன்னிங்ஸின் போது விராட் கோலி தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ஹெண்ட்ரிக்ஸின் தோள்பட்டையை இடித்தபடி ஓடினார்.  ஆட்டம் முடிந்தவுடன் கள நடுவர்கள் ஐசிசி விதிமுறைகளை மீறியதாகக் கூறி போட்டி நடுவரிடம் புகார் அளித்தனர். துரித விசார ணையில் களமிறங்கிய போட்டி நடுவர் விதி முறையை மீறிய கோலிக்கு எச்சரிக்கை யுடன் ஒரு அபராதப் புள்ளி வழங்கினார்.  ஐசிசி விதிப்படி கிரிக்கெட் வீரர் ஒருவர் 24 மாத காலத்துக்குள் 4 அபராதப் புள்ளியைப் பெற்றால் அவருக்கு அபராதப் புள்ளி பெற்ற போட்டிக்கு அடுத்து வரும் சில ஆட்டங்களிலோ அல்லது தொட ரிலியோ விளையாடத் தடை விதிக்கப்படும். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தடை உத்தரவு பெறாமல் இதுவரை 3 அப ராதப் புள்ளிகளை தன் வசம் வைத்துள் ளார். இனி வரும் ஆட்டங்களில் கேப்டன் என்ற பொறுப்பை உணர்ந்து கவனமாகச் செயல்பட்டால் மட்டுமே தடை உத்தரவி லிருந்து கோலி தப்பிக்க முடியும்.

;