பாகிஸ்தான் நாட்டின் முக்கிய நகரான கராச்சியில் உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. குல்பர்க் மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான லீக் ஆட்டத்தில் கள நடுவராகப் பணியாற்றிய நசிம் ஷீக் திடீரென மைதானத்தில் சுருண்டு விழுந்தார். முதலுதவி சிகிச்சையின் போது மாரடைப்பு காரணமாக மயங்கி நசிம் ஷீக் விழுந்தார் எனத் தெரியவர, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே நசிமின் உயிர் பிரிந்தது.