tamilnadu

img

பாரா ஒலிம்பிக் கிரிக்கெட் மாற்றுத்திறனாளி வீரர்களை கண்டுகொள்ளாத அரசுகள்

பாரா ஒலிம்பிக் கிரிக்கெட்

இங்கிலாந்தில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையுடன் திரும்பியுள்ள இந்திய அணிக்கு பாராட்டு கூட கிடைக்காதது வேதனையளிப்பதாக உள்ளது என்கிறார் மதுரை வீரர் சச்சின் சிவா.  மதுரை தெப்பக்குளம் மருதுபாண்டியர் நகர் 3-ஆவது தெருவைச் சேர்ந்த செல்வம் ஓட்டு நராக உள்ளார். இவரது மனைவி தமிழரசி. இவர்களுக்கு சச்சின் சிவா என்ற மகன் உள்ளார். மாற்றுத்திறனாளியான இவர் பாரா கிரிக்கெட்டில் விளையாட தேர்வாகியுள்ளார்.  செப்டம்பர் 22-25 ஆகிய தேதிகளில் நேபா ளத்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டி களில்  முதன்மை ஆட்டக்காரராக முத்திரை படைக்கவிருக்கிறார்.  தமிழ்நாடு அணிக்கு தலைமையேற்று 120 போட்டிகளில் விளையாடி சுமார் 80 போட்டி களில் வென்றிருக்கிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி  22-ஆம் தேதி தன்னுடைய பிறந்த நாளன்று மேற்குவங்க அணிக்கு எதி ராக விளையாடி 64 பந்துகளில் 115 ரன்களை விளாசி நாட்அவுட் பேட்ஸ்மேனாக  சாதனை படைத்துள்ளார். இது தேசிய அளவில் டி-20 போட்டியில் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரரால் மேற்கொள்ளப்பட்ட சாதனையாகும்.

அசாமில் 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அசாம் அணிக்கு எதிரான டி- 20 போட்டியில் 15 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து தேசிய சாதனை படைத்துள்ளார்.  பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணி களோடு விளையாட 12-ஆவது பேட்ஸ்மேனாக தேர்வு பெற்றிருக்கிறார்.  சச்சின் சிவா கூறியதாவது, ‘சிறிய வயது முதலே எனக்கு கிரிக்கெட் மீது தீராத மோகம் இருந்தது. நண்பர்களோடு ஆர்வமுடன் விளை யாடச் செல்வேன். மாற்றுத் திறனாளி என்பதால் என்னை சேர்க்க மாட்டார்கள்.  நானாகக் கற்றுக் கொள்ளத் தொடங்கினேன். சச்சின் டெண்டுல் கரை  குருவாகக் கொண்டு, அவரது ஒவ்வொரு ‘ஷாட்’களையும் கற்றுக் கொள்ளத் தொடங்கி னேன்’.  இங்கிலாந்தில் அண்மையில் நடைபெற்ற பாரா கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பை வென்றதைப் பெருமையாகக் கருது கிறேன்,  அந்தப் போட்டிக்கு தேர்வாகிய நான் காயம் காரணமாக இடம்பெற வில்லை. இந்தச் சாதனை இந்தியாவில் பெரிதாகப் பார்க்கப்பட வில்லை.  பாரா கிரிக்கெட்டுக்கு போதுமான ஊக்குவிப்பு மத்திய, மாநில அரசுகளிடமிருந்து கிடைக்காதது வருத்தமளிக்கிறது. 

‘மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு போதுமான வசதிகள் எந்த மாநிலத்திலும் செய்து தரப்படவில்லை. இதனால் நிறைய வீரர்களின் திறமைகள் வெளிக் கொண்டு வர முடியாத நிலை உள்ளது. விளையாட்டு உபகரணங்களுக்காவது அரசு நிதி ஒதுக்க வேண்டும். விளையாட்டில் பங்கேற்கச் செல்வதற்கான செலவை அர சாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்’.  உலகக் கோப்பையை இழந்து நியூசி லாந்திடம் தோற்று இங்கிலாந்திலிருந்து திரும்பி யது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. அதே இங்கிலாந்தில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் வெற்றி பெற்று கோப்பையுடன் திரும்பியுள்ள இந்திய அணிக்கு பாராட்டு சொற்கள் கூட கிடைக்காதது வேதனையளிக்கி றது என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார் சச்சின் சிவா. சச்சின் சிவா பயிற்சி பெற இலவச இடம் தந்து உற்சாகப்படுத்தி வரும் ஃபோர்ஸா என்ற அமைப்பின் மேலாளர் அஹமது கூறுகை யில், கிரிக்கெட் பயிற்சிக்காக மாடியில் அமைக் கப்பட்டுள்ள எங்களது தளத்தில் பயிற்சி பெற கட்டணம் வசூலிக்கிறோம். சச்சின் சிவா போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு எங்களா லான உதவி செய்கிறோம். மத்திய- மாநில அரசுகள் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கென தனித்துறையை உருவாக்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
 

;