12-வது உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வெற்றி பெறும் அணிக்குத் தங்க முலாம் பூசப்பட்ட கோப்பை பரிசாக அளிக்கப்படும். அதே வடிவிலான கோப்பையை விழுப்புரத்தைச் சேர்ந்த ரமேஷ் என்ற நகை தொழிலாளி 20 மில்லி கிராம் தங்கத்தில் (60 ரூபாய் செலவில்) உலகக்கோப்பையைச் செய்துள்ளார். அதாவது செய்யப்பட்ட உலகக்கோப்பை யானது ஒரு அரிசியின் உயரத்தை விட குறைவானது என்றால் எவ்வளவு சிறிய தாக இருக்கும். சிந்திக்கவே மெய் சிலிர்க்கிறது. கடந்த 2015-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரைக் கொண்டாடும் வகையில் 40 மில்லி கிராம் எடையில் வடிவமைத்திருந்தார் ரமேஷ். தற்போது தனது சாதனையைத் தானே முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.