tamilnadu

img

ஆசிய போட்டியில் தங்கம் வென்ற நீச்சல் வீரர்

இந்திய நீச்சல் அணியின் முக்கிய வீரரான தமிழகத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் 2010-ஆம் ஆண்டிற்கான ஆசிய நீச்சல் தொடரின் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தவர். சென்னை அமைந்தகரை ஷெனாய் நகரில் வசித்து வரும் பாலகிருஷ்ணன் நண்பர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.அரும்பாக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரியை பாலகிருஷ்ணன் ஓவர் டேக் செய்ய முயன்றார். கணிப்பு தவறியதால் தடுமாற்றம் ஏற்பட்டு லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்.29 வயதாகும் பாலகிருஷ்ணன் நீச்சல் பிரிவுகளில் கடினமான பிரிவான பேக் ஸ்ட்ரோக் பிரிவில் நன்கு நீந்தக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.