இந்திய கிரிக்கெட் அணி 5 டி-20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் என 3 விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்க நியூஸிலாந்து நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. ஜனவரி 24-ஆம் தேதியன்று தொடங்கும் இந்த தொடரில் களமிறங்க இந்திய அணி 2 குழுவாக நியூஸிலாந்து நாட்டின் முக்கிய நகரான ஆக்லாந்திற்குச் சென்றுள்ளது. இந்த குழு பயணத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர் தவான் செல்லவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின் போது இடது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் நியூஸிலாந்திற்கு எதிரான சுற்றுப்பயணத்தின் டி-20 தொடரில் மட்டும் தவான் நீக்கப்பட்டுள்ளார்.