tamilnadu

img

பி.பி.சியின் சிறந்த விளையாட்டு வீரர் விருதை வென்ற இங்கிலாந்து வீரர்!

பி.பி.சியின் 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச விளையாட்டு வீரருக்கான  விருதை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட பி.பி.சி குழுமம் கடந்த 1954-ஆம் ஆண்டு முதல் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி விருதுக்கு உரியவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வரிசையில் பி.பி.சியின் 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச விளையாட்டு வீரருக்கான விருதுக்கு, இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முதல் முறையாக உலக கோப்பையை வெல்ல காரணமாக இருந்ததற்காக  பென் ஸ்டோக்ஸ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். ஸ்காட்லாந்தின் அபர்ட்டி நகரத்தில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில் அவருக்கு விருது வழங்கப்பட்டது.

;