பணம் வாங்க மறுத்த இந்திய ஓட்டுநர்
ஆஸ்திரேலிய நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன் பாகிஸ்தான் வீரர்களான ஷாஹீன் ஷா அப்ரிடி, யாசிர் ஷா மற்றும் நசீம் ஷா ஆகியோர் ஆஸ்திரேலியா வில் உள்ள பிரபல இந்திய உணவகத் திற்கு டாக்ஸியில் (கார்) சென்றுள்ள னர். உணவகம் வந்தவுடன் போக்கு வரத்திற்கான கட்டணத்தைப் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஓட்டு நரிடம் அளித்துள்ளனர். இந்தியராகிய டாக்ஸி ஓட்டுநர் பாகிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரங்கள் என்பதை உணர்ந்து பணம் வாங்க மறுத்து பரவாயில்லை என்று அன்புடன் கூறியுள்ளார்.
இந்தியாவில் பாகிஸ்தான் பெயரைக் கூறினாலே பிடிக்காது. டாக்ஸி ஓட்டுநரும் இந்தியர் தான். இவர் மட்டும் நமக்கு மதிப்புடன், மரியாதை யும் சேர்த்து இலவச பயணம் அளித்து ள்ளாரே என்ற மனநிலையுடன் வியந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தாங்கள் வந்த உணவகத்திற்கு அழைத்துச் சென்று விருந்து படைத்துள்ளனர். இதனைப் புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது டாப் டிரெண்டிங்கில் உள்ளது. குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து மீம்ஸ் மற்றும் டிரெண்டிங்கிற்கான வேலையைப் பார்த்து வருகின்றனர்.