tamilnadu

img

ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆண்டர்சன் விலகல்

பாரம்பரியமிக்க கிரிக்கெட் தொடரான ஆஷஸ் தொடர் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது.  5 போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொட ரின் முதல் 3 போட்டியின் முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளன. முதல் போட்டி யில் ஆஸ்திரேலிய அணியும், 2-வது டெஸ்ட் போட்டி டிராவில் நிறைவடைந்த நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது.  இந்நிலையில் 4-வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 4-ஆம் தேதி மான்செஸ்டர் மைதானத்தில் தொடங்கு கிறது. இங்கிலாந்து நாட்டின் ஸ்விங் நட்சத்திரம் ஆண்டர்சன் முதல் டெஸ்டில் கெண்டைக்காலில் வலி காரணமாக நான்கு ஓவர்கள் மட்டுமே பந்து வீசி போட்டியிலிருந்து விலகினார். காயத்தின் வீரியம் அதிகமாக இருந்ததால் 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் முழு உடல் தகுதியை எட்டமுடிய வில்லை. இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டி மீதம் உள்ள நிலையில் ஆண்டர்சன் உடல் தகுதியை எட்டிவிடு வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடல் தகுதி பிரச்சனை இன்னும் நிலுவையில் உள்ளதால் ஆஷஸ் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள் ளார்.  ஆண்டர்சனுக்குப் பதிலாக கிரைக் ஓவர்டன் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டாண்டுக் காலமாகக் காயப் பிரச்சனையால் விளையாடாமல் இருந்த ஆண்டர்சன் தற்போது தான் முழு உடல் தகுதியை எட்டி ஆஷஸ் தொடரில் கள மிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.