tamilnadu

img

பவுன்சரால் இரண்டாக பிளந்த ஹெல்மெட்

இங்கிலாந்து அணி (397 ரன்கள்) நிர்ணயித்த கடின மான இலக்கை ஆப்கானிஸ்தான் வீரர்கள் பதற்றமில்லாமல் முன்னேறிக் கொண்டிருந்தனர். விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தாலும் 4-வது வீரராக களம் இறங்கிய ஹஸ்மதுல்லா ஷாகிதி (76 ரன்கள்) ஆறுதல் அளிக்கும் வகை யில் அசத்தலான ஆட்டத்தை வெளிப் படுத்தி ரன் வேட்டையில் அதிக கவனம் செலுத்தினார்.   24 ரன்கள் எடுத்திருக்கும்போது இங்கிலாந்து வீரர் மார்க் வுட் 140 கி.மீ வேகத்தில் வீசிய மிடில் பவுன்சர் ஷாகிதியின் ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. நிலைகுலைந்த அவர் மைதானத்தில் தடுமாறி விழுந்தார். உடனடியாக ஐசிசி மருத்துவர்கள் பரிசோதித்து ஓய்வு எடுக்க வேண்டும், நீங்கள் பெவிலியன் திரும்புங்கள் என ஷாகிதியை வற்புறுத்தினர். ஷாகிதி வெளியேற விருப்பம் இல்லை எனக் கூறி தொடர்ந்து பேட்டிங் செய்து, மேற்கொண்டு 52 ரன்கள் விளாசினார்.

ஆட்டம் நிறைவடைந்த பின்  இதுகுறித்து ஷாகிதி கூறுகையில், “பவுன்சர் தாக்கியபொழுதிலும் நான் உடனடியாக எழுந்து விளை யாட விரும்பியது என் அம்மாவிற்காகத்  தான். கடந்த வருடம் நான் எனது தந்தை யை இழந்தேன். இந்த பவுன்சர் தாக்கு தலால் எனது அம்மாவின் மனதை கஷ்டப்படுத்த விரும்பவில்லை” எனக் கூறினார். பவுன்சர் தாக்கிய பொழுதிலும் அதனுடைய வலியைப் பற்றி கண்டு கொள்ளாமல் தனது அம்மாவிற்காகத் தொடர்ந்து விளையாடிய ஹஸ்ம துல்லா ஷாகிதியின் செயல் கிரிக்கெட் உலகில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.