இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணி தற்போது டி-20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளை டி-20 தொடரின் முதலிரண்டு ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் ஆளுக்கொரு வெற்றியை ருசித்து தொடரில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ள நிலையில், 3-வது மற்றும் கடைசி டி-20 ஆட்டம் மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் புதனன்று நடைபெறுகிறது. இரு அணிகளும் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் தீவிர பயிற்சியுடன் களமிறங்குவதால் மும்பை டி-20 ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள்
இடம் : வான்கடே மைதானம், மும்பை
நேரம் : இரவு 7 மணி