சூதாட்ட தொடர்பு பிரச்சனை காரணமாக வங்கதேச அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹாசன் ஒரு வருட சர்வதேச தடை உத்தரவு பெற்றுள்ளார். இதனால் உள்ளூர் மற்றும் சர்வதேச தொடர்களில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ஷாகிப் கால்பந்து பக்கம் யு டர்ன் அடித்துள்ளார். வங்கதேச உள்ளூர் கால்பந்து தொடரில் ஃபுட்டி ஹேக்ஸ் என்ற அணிக்காக விளையாடி வரும் ஷாகிப், கொரியன் எக்ஸ்பாட் என்ற அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றியை ருசித்து சக வீரர்களோடு கொண்டாடினார்.